Tamil Nadu Politics 2017 February

இங்கே கனடாவில் அமர்ந்துகொண்டு தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நொடிக்கு ஒரு முறை கவனித்து வரும் எனக்கு விளங்கும் ஒரு கருத்து என்னவென்றால்... மக்கள் அரசியலில் மெதுவாக ஈடுபட தொடங்கிவிட்டனர்! இதன் பாதிப்பு மிகவும் வெளிச்சமாக தெரியாவிட்டாலும், இந்த மாற்றம் நாம் முறையான பாதையில் பயணிக்க உதவும்... அதிக மக்கள் சமூக வலை தளங்களை பயன்படுத்தும்பொழுது ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்படுகிறது... சரி எது தவர் எது என்று விவாதிக்க ஒரு களம் அமைத்து கொடுக்கிறது இந்த சமூக வலை தளங்கள் .. இப்படி அல்லவா ஒரு சமூகம் வளர வேண்டும்... கலை அறிவியலைப்போல் அரசியலும் விவாதிக்கப்படவேண்டும்!

இந்த குறிப்பு தோன்றியதன் காரணம் - தமிழகத்தின் முதலமைச்சர் பண்ணீர்செல்வம் அவர்கள் திடீரென்று நாற்பது நிமிடங்கள் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் த்யான நிலையில் அமர்ந்தார். பிறகு மிகவும் தெளிவான மற்றும் நிதானமான நிலையில் பேட்டி அளித்தார் - அதில் ஒரு 'can of worms' திறந்துவிடப்பட்டுள்ளது! இது எவ்வாறு முடியும் என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம் !

அனால் இதில் இருந்து ஒரு 'takeaway' என்னவென்றால் - தமிழர்கள் மெதுவாக விழிக்கிறார்கள்! சமூக வலைத்தளங்கள் இதற்கு ஒரு முக்கியமான பங்களிப்பை பெறுகின்றது! இன்று நடந்தேறும் இந்த அலங்கோல அரசியல் என்றைக்குமே நடந்ததுதான்! இப்பொழுது வெட்ட வெளிச்சமாய் மக்கள் அதை விமர்சிக்கிறாரகள் - இது தான் இங்கு நடந்த ஒரு மிகவும் அற்புதமான மாற்றம்! அரசியல்வாதிகள் இப்பொழுது மக்களை மற்றும் சமூகத்தை (சமூக வலைத்தளம் இன்னும் சில வருடங்களில் பொது சமூகமாக மாறும்) கருத்தில் கொண்டு தான் முடிவுகளை எடுக்க முடியும்!

மாற்றம் மாறாதது! விடியும் வேளை சிறப்பாகவே  விடியும்! 

Comments

Popular Posts